ருசியாக சமைக்கவில்லை என்று மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு


ருசியாக சமைக்கவில்லை என்று மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 March 2017 12:50 AM IST (Updated: 20 March 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

ருசியாக சமைக்கவில்லை என்று மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவமொக்கா,

ருசியாக சமைக்கவில்லை என்று மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ருசியாக சமைக்கவில்லை என்று...

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா சிராளகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர்(வயது 30). விவசாயி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ரேணுகாம்மாவுக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கங்காதர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரேணுகாம்மாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் ரேணுகாம்மாவை, அவர் அடித்து உதைத்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கங்காதர், சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது ரேணுகாம்மாவிடம் ருசியாக சமைக்கவில்லை என்று கூறி திடீரென கங்காதர் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மண்எண்ணெயை ரேணுகாம்மா மீது ஊற்றி தீ வைத்தார்.

சாவு

இதில் ரேணுகாம்மாவின் உடலில் தீ மளமளவென வேகமாக பரவி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கங்காதர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ரேணுகாம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் 10–ந் தேதி நடந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி பிரபாவதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் ருசியாக சமைக்கவில்லை என்று ரேணுகாம்மாவை, கங்காதர் எரித்துக் கொன்றது நிரூபணம் ஆனதால் குற்றம்சாட்டப்பட்ட கங்காதருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story