மறைமலைநகர் அருகே பெண் தூக்குப்போட்டு சாவு


மறைமலைநகர் அருகே பெண் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 20 March 2017 3:30 AM IST (Updated: 20 March 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் அருகே பெண் தூக்குப்போட்டு சாவு குடும்பத்தகராறில் விபரீத முடிவு

வண்டலூர்,

மறைமலைநகரை அடுத்த நின்னைக்கரை, உடையார் தெருவைச்சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது30). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்–மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


Next Story