குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
அச்சரப்பாக்கம்
அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றி வெங்கடேசபுரம் பகுதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வெங்கடேசபுரம் பகுதி பொதுமக்கள் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் அச்சரப்பாக்கம் பெரியகளக்காடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது எனக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அச்சரப்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story