நாகை மீனவர்கள் கரை திரும்பினர் குறைவான மீன்களே கிடைத்ததால் கவலை


நாகை மீனவர்கள் கரை திரும்பினர் குறைவான மீன்களே கிடைத்ததால் கவலை
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

வேலை நிறுத்தத்துக்கு பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். குறைவான மீன்களே கிடைத்ததால் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்,


கடந்த 6-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ (வயது21) உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர். அதைதொடர்ந்து தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை அரசை கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். பின்னர் 9 நாட்களாக ஈடுபட்ட வேலை நிறுத்த போராட்டதை கைவிட்டு கடந்த 15-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற நாகை மீனவர்களில் ஒரு சிலர் நேற்று காலை கரைக்கு திரும்பினர். 9 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறை வான மீன்களே கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அக்கரைபேட்டை புதிய மீன்பிடி இறங்கு தளத்திற்கு மீன்களை வாங்குவதற்காக பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வேலை நிறுத்தத்துக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர் களுக்கு குறைவான அளவு மீன்களே கிடைத்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர். 

Next Story