மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையம் அருகே மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாயுமானவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்திட வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுவதை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முருகையன், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குருசந்திரசேகரன், எல்.ஐ.சி. சங்க நிர்வாகி செந்தில்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி வீரமணி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி தியாகராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story