ரூ.6 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்கள் அமைச்சர் வழங்கினார்


ரூ.6 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்கள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் ரூ.6 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

குடவாசல்,


குடவாசலில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் ரூ.20 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் குடவாசல் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பாசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன் வரவேற்றார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சி நிவாரண தொகை

மக்களின் கோரிக்கைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் ஆட்சி தான் ஜெயலலிதாவின் ஆட்சி. அதன்படி தான் இன்றைய ஆட்சியும் நடக்கிறது. வறட்சி நிவாரண தொகை 2 நாட்களில் அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சுவாமிநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டி.ராஜேந்திரன், குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன், விவசாய சங்க நிர்வாகி கிருஷ்ணமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story