பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கற்கும் பாரதம் எழுத்தறிவு தேர்வை 6,093 பேர் எழுதினர்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கற்கும் பாரதம் எழுத்தறிவு தேர்வை 6,093 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 20 March 2017 2:19 AM IST (Updated: 20 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கற்கும் பாரதம் எழுத்தறிவு தேர்வை 6,093 பேர் எழுதினர்.

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் 15 வயதிற்கு மேல் 80 வயதிற்குள் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு நேற்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 286 பேர் எழுதினர். இத்தேர்வு நான்கு ஒன்றியங்களில் உள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் செல்வகுமார், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கற்கும் பாரதம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெறும் மையங்களை பார்வை யிட்டனர்.

6,093 பேர் எழுதினர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 160 மையங்களில் கற்கும் பாரதம் எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதில் 15 வயதுக்கு மேல் 80 வயதுக்குட்பட்ட எழுத படிக்க தெரியாத பயனாளிகள் 5,807 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். திருமானூர் மையங்களை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் பல்வேறு தேர்வு மையங்களை மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனர் செல்வகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, கற்கும் பாரதம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்குலின், செல்வகுமார், அரியலூர் வட்டார வள மேற்பார்வையாளர் மேகநாதன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனந்தநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது பயனாளிகள் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தனர்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் 6,093 பேர் எழுத்தறிவு தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.


Next Story