குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவம்: இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
கன்னியாகுமரி,
ராஜாக்கமங்கலம் அருகே முருங்கவிளையை சேர்ந்தவர் அன்புலிங்கம், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மணிக்கலா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மணிக்கலா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிக்கலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணையும் மேற்கொண்டுள்ளார்.
டிரைவர்
கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரை சேர்ந்தவர் தனம் (வயது 32), டிரைவர். சொந்தமாக வாடகை கார் ஓட்டி வந்தார். இவருடைய மனைவி அஸ்வின் மேகலா. தனத்துக்கு மது பழக்கம் உண்டு. இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தனம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தனம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டின் கிரேசியஸ், சுப்பிரமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர்
திருவட்டார் அருகே மாத்தூர் குறக்குழியை சேர்ந்தவர் லாசர் (வயது 80). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த லாசர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாசரின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story