ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 1,693 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் தக்கலை ஆகிய போலீஸ் சப்–டிவிஷன்களில் போலீசார் நடத்திய சோதனையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 1,693 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அடுத்த வாரத்தில் இருந்து இருசக்கர வானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டுள்ளார். இதனால் குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story