ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சையிலும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும், பஸ்களை 2 மணி நேரம் இயக்காமலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை நகர கிளை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், தொ.மு.ச. மத்திய சங்க தலைவர் ஜெயவேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சந்திரசேகரன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் அப்பாதுரை, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்று மனு


மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று பேரணியாக சென்று தமிழக அரசை வலியுறுத்தக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் தெரிவித்தார்.


Next Story