சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,234 டன் உரம் தஞ்சை வந்தது


சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 1,234 டன் உரம் தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்த சரக்கு ரெயிலில் 1,234 டன் உரம் தஞ்சை வந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 578 ஏக்கரில் சாகுபடி நடைபெற்று உள்ளது. இதற்கு தேவையான உரங்களும் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

1,234 டன் உரம்


இந்த நிலையில் சென்னை மணலியில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,100 டன் யூரியாவும், 134 டன் காம்ப்ளக்ஸ் உரமும் என மொத்தம் 1,234 டன் உரம் தஞ்சை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.


Next Story