போக்குவரத்து விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்


போக்குவரத்து விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

போக்குவரத்து விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று காலை தூத்துக்குடியில் நடந்தது. தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் தலைமை தாங்கினார். மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், தொழிலாளர் நலவாரிய உதவி கணக்கு அலுவலர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு ஏற்படுகிற சிரமங்களை விளக்கி கூறினர். அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், விபத்து ஏற்படாமலும் இருக்க சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குறுகிய சந்துகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கவும் வலியுறுத்தினர்.

போக்குவரத்து விதிகள்

தொடர்ந்து அதிகாரிகள் பேசும் போது, ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தில் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். அனைவரும் தவறாமல் சீருடை அணிய வேண்டும். போக்குவரத்து விதிகளை மதித்து ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். அனைவரும் தொழிலாளர் நலவாரியத்தில் இணைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

முகாமில் திரளான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story