கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, சுந்தரராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் வரவேற்று பேசினார்.
செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 157 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பகுதிநேர ரேஷன் கடை
முன்னதாக கோவில்பட்டி அருகே ஆண்டிபட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ரேஷன் கடையை திறந்து வைத்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்க தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், புதுவாழ்வு திட்ட மேலாளர் கர்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஈசுவர பாண்டியன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமர், மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
பின்னர் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் 605 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், உமா மகேசுவரி, ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ரூபம் வேலவன், ஞான குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story