திருச்செந்தூரில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

திருச்செந்தூர்,
இந்து முன்னணி நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், செயலர் முத்துக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன், இணை அமைப்பு பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 16–ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story