ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 4–வது நாளாக போராட்டம்
பென்சன் வழங்கக்கோரி நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 4–வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தமிழக அரசு, போக்குவரத்து கழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
4–வது நாளாக...
நேற்று 4–வது நாளாக போராட்டம் நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலம் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணி முதல் போராட்டம் தொடங்கியது. தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அவர்கள், “அரசு போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் போக்குவரத்து கழகங்களின் சேவை பாதிக்கும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சன் முழுமையாக கிடைக்கவில்லை. அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்“ என்று கூறினார்கள்.
இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story