அந்தேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 45 குடிசைகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை
அந்தேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 45 குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து தள்ளியது.
மும்பை,
அந்தேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 45 குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து தள்ளியது.
சட்டவிரோத குடிசைகள்மும்பை அந்தேரி டி.என்.நகர் மெட்ரோ ரெயில்நிலையம் அருகில் உள்ள சுரேஷ்நகரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் 60 அடி சாலை உள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து பலர் குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதன் காரணமாக 60 அடி சாலை 15 அடி சாலையாக சுருங்கியது.
கடந்த 8 ஆண்டுகளாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுபற்றி புகார்கள் வந்ததை அடுத்து மாநகராட்சி கே வார்டு உதவி கமிஷனர் கிரண் ஆசரேக்கர் அந்த சட்டவிரோத குடிசைகளை இடித்து தள்ள உத்தரவிட்டார்.
45 குடிசை வீடுகள்இதையடுத்து நேற்று அந்த சாலையில் இருந்த 45 குடிசை வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த பணியில் 40 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் அம்போலி போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது மீண்டும் அந்த சாலை 60 அடி சாலையாக மாறி உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் சிரமமின்றி செல்ல தொடங்கி உள்ளன.