ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணை கடத்தி தாக்குதல் ஆட்டோ டிரைவர் கைது


ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணை கடத்தி தாக்குதல் ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 March 2017 4:01 AM IST (Updated: 20 March 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

தானே டோம்பிவிலி ரெயில்நிலையம் அருகில் உள்ள ராம்நகர் போலீஸ் நிலைய சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தானே,

தானே டோம்பிவிலி ரெயில்நிலையம் அருகில் உள்ள ராம்நகர் போலீஸ் நிலைய சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் சுனிதா நந்மேஹர் என்பவர் ஆட்டோ டிரைவர் ரவிகுப்தாவிடம் ஆட்டோவை அங்கிருந்து எடுக்கும்படி கூறினார். இதனால் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் சுனிதா நந்மேஹர் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டு போலீஸ் நிலையம் செல்லும்படி கூறினார். இதைத் தொடர்ந்து ரவிகுப்தா ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிச் சென்றார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் தாகூர்லி காட்டுப்பகுதிக்கு அவரை கடத்திச்சென்று அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுனிதா நந்மேஹர் இதுபற்றி ராம்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரவி குப்தாவை கைது செய்தனர்.

Next Story