மருத்துவர்களின் விரல் நுனியில் ரோபோ
அறுவை சிகிச்சையிலும் ரோபோவை பயன்படுத்தும் முறை பெருகி வருகிறது. தற்போது மருத்துவர்கள் கை உறைபோல விரல்களில் அணிந்து கொள்ளக்கூடிய ரோபோ வந்துள்ளது.
அறுவை சிகிச்சையிலும் ரோபோவை பயன்படுத்தும் முறை பெருகி வருகிறது. தற்போது மருத்துவர்கள் கை உறைபோல விரல்களில் அணிந்து கொள்ளக்கூடிய ரோபோ வந்துள்ளது. இது மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பிசகின்றி செய்துமுடிக்க உதவுகிறது. அத்துடன் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தருகிறது. சிகிச்சையை திறம்பட செய்கிறோமா என்பதை தெரிந்து கொள்ளவும் இது துணை செய்யும். இதை விரல் களுக்கான முதுகெலும்பு என்று வர்ணிக்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
பிரிஸ்டோல் நகரில் செயல்படும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை உருவாக்கி உள்ளனர். மருத்துவர்கள் மனக்கட்டுப்பாட்டுடனும், தடுமாற்றம் இல்லாமல் சிறந்த பிடிமானத்துடன் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பணிகளை மேற்கொள்ள இந்த ரோபோ உறை உதவும்.
மருத்துவர்களின் கை அசைவை வைத்து அவர் செய்யப்போகும் செயல் எத்தகையது என்பதை கணித்து அறிவிக்கும். அதாவது அவர் வெட்டுப்போடப் போகும் இடம் சரியான பகுதியா? என்பதை மருத்துவர் கையை கொண்டு செல்லும்போதே கணிக்கப்பட்டு காட்டும். மேலும் இதனுடன் இணைப்பாக உள்ள ஸ்மார்ட் கண்ணாடிகள், பாதிக்கப்பட்டவரின் உடலை ஊடுருவி கூர்ந்து நோக்கி சரியான சிகிச்சையளிக்க உதவும். இன்னும் சில ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு முறைகளுக்குப் பின் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

Next Story