20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் காத்திருப்பு போராட்டம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்
ராமநாதபுரம்,
காத்திருப்பு போராட்டம்
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவதோடு, தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கோர்ட்டு உத்தரவின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் 2 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பணிகள் பாதிப்புபோராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரையிலான நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த பகுதியில் சமையல் செய்து சாப்பிட்டு தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் இந்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவைகளில் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன.