மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு சாவு
அருப்புக்கோட்டை அருகிலுள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது57). கூலித்தொழிலாளி.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகிலுள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது57). கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் பூமிநாதனும் அவரது மனைவி புஷ்பமும் சொந்த ஊரில் இருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு புஷ்பம் இறந்து போனார். மனைவியை பிரிந்த வேதனையில் இருந்த பூமிநாதன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Next Story