கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 9:29 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை

கிருஷ்ணகிரி,

காலவரையற்ற போராட்டம்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

கோ‌ஷங்கள்

போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சையத் பயாஸ் அகமத் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.

இதில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினார்கள். இதில் நிர்வாகிகள், ஜோதிமணி, ஆறுமுகம், சுந்தரபாஸ்கர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story