யாதமரி அருகே ஆயில் டேங்கர், வேன் மோதலில் பெண் உள்பட 3 பேர் பரிதாப சாவு 10 பக்தர்கள் படுகாயம்
யாதமரி அருகே ஆயில் டேங்கர், வேன் மோதலில், திருமலையில் தரிசனம் செய்து
ஸ்ரீகாளஹஸ்தி,
திருமலையில் தரிசனம்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கிஷால், சவ்ரவ். இருவரும், வேலைத்தேடி கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதிக்கு வந்தனர். இருவரும், அப்பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இருவருடன் சேர்ந்து, சிவலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். 3 பேரும் நெருங்கிய நண்பர்களாகினர். சவ்ரவ் தனது மகன் ரிதனுக்கு (வயது 2) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடியை காணிக்கையாக செலுத்த தீர்மானித்தார்.
அதன்படி 18–ந்தேதி சவ்ரவ் உள்பட பலர் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனர். கோவிலில் ரிதனின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி விட்டு, ஏழுமலையானை தரிசனம் செய்த பின், திருமலையில் இருந்து அனைவரும் வேனில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டனர். சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் லட்சுமய்யாகண்டிகை அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்த ஆயில் டேங்கரும், அவர்கள் சென்ற வேனும் மோதிக்கொண்டன.
10 பேர் படுகாயம்இந்த விபத்தில் ரிதன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனின் தாயார் காமாட்சி (27) படுகாயத்துடன் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக செத்தார். மேலும் சிகிச்சை பலனின்றி விஷால்பாபு (26) என்பவர் உயிரிழந்தார்.
வேனில் வந்த பக்தர்களான சந்தோஷி (47), பூஜா (9), அபிஷேக் (8), சிவலிங்கம் (38), ரேணுகா (30), சவ்ரவ் (30), கிஷால் (31), தீப்தி (31), ரவிக்குமார் (25) மற்றும் ஆயில் டேங்கர் டிரைவர் லோகேஷ் (26) ஆகிய 10 பேரும் படுகாயத்துடன் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து யாதமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.