நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரி குழித்துறையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். நீர் ஆதாரங்களை தூர்வாரி அதிக அளவில் தண்ணீரை சேகரித்து நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலு
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். நீர் ஆதாரங்களை தூர்வாரி அதிக அளவில் தண்ணீரை சேகரித்து நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், குழித்துறை நகர தலைவர் பக்தசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story