திருமுல்லைவாயல் அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கைது


திருமுல்லைவாயல் அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 21 March 2017 3:15 AM IST (Updated: 21 March 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

ஆவடி,

 சென்னை பழவந்தாங்கல் இந்து காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி (61). தபால் துறையில் ஆடிட்டராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில் சரவணமூர்த்தி, முருகனிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தில் ‘புராஜக்ட்’ செய்கிறேன். இதில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் பணத்தை பெற்றதாக தெரிகிறது. ஆனால் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

சரவணமூர்த்தி கொடுத்த காசோலையும், வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டது. இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சரவணமூர்த்தியை கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை சரவணமூர்த்தியை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தார். மேலும் சரவணமூர்த்திக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story