குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் 6½ நகை திருடிய கணவன்–மனைவி கைது


குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் 6½ நகை திருடிய கணவன்–மனைவி கைது
x
தினத்தந்தி 21 March 2017 4:00 AM IST (Updated: 21 March 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த சந்தை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார்.

வண்டலூர்,

 இவருடைய மனைவி நவீதா(21). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த நீது(29) என்ற பெண் நவீதாவுக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை வாங்கி குடித்த நவீதா மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் அணிந்து இருந்த 6½ நகையை திருடி விட்டு நீது தப்பிச்சென்று விட்டார். மயக்கம் தெளிந்து எழுந்த நவீதா, தான் அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் நீது, அவருடைய கணவர் செந்தில்குமார்(33) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story