ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கரூர்,

ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவித்த படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம்

இதைத்தொடர்ந்து நேற்று கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.


Next Story