நெல்லை அருகே சாக்லேட் வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
நெல்லை அருகே கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், சாக்லேட் வாங்குவது போல் நடித்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். மளிகை கடை நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் நகர் 7–வது தெருவை சேர்ந்தவர் அருள்ஜான் அந்தோணி (வயது 42).
பேட்டை,
நெல்லை அருகே கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், சாக்லேட் வாங்குவது போல் நடித்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
மளிகை கடைநெல்லை அருகே உள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் நகர் 7–வது தெருவை சேர்ந்தவர் அருள்ஜான் அந்தோணி (வயது 42). இவருடைய மனைவி சபினா மேரி (38). இவர்கள் திருவள்ளுவர் நகர் 1–வது தெருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் சபினா மேரி கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
தெருவில் ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். அவர்கள் கடைக்கு வந்து 3 ரூபாயை கொடுத்து சாக்லேட் தருமாறு கேட்டனர். சபினா மேரி, கடையில் இருந்த சாக்லேட்டுகளை எடுக்க முயற்சி செய்தார்.
நகை பறிப்புஇந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மர்ம நபர்கள், சபினா மேரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை கண்இமைக்கும் நேரத்தில் பறித்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சபினா மேரி, திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சபினா மேரி சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து நகை பறித்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.