குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2017 2:36 AM IST (Updated: 21 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்பரப்பி ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது குடிநீர் வழங்கும் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து உள்ளதால் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் வரை தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்து தருவதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story