பெட்டிக்கடை அமைக்க 2 பேருக்கு நிதிஉதவி கலெக்டர் வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் பெட்டிக்கடை அமைக்க 2 பேருக்கு நிதிஉதவியை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக் டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
நிதி உதவி
இதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்படி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மேலமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த உஷா (பழங்குடியினர்) மற்றும் முதுகுளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (பழங்குடியினர்) ஆகிய 2 பேருக்கும் பெட்டிக்கடை அமைப்பதற்கு தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story