ஐஸ்வர்யா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஐஸ்வர்யா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வருகை தந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை குரும்பலூரில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் ஐஸ்வர்யாவின் பெற்றோர் சந்தித்தனர்.
அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராமகிருஷ்ணன் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்கொடுமை தடுப்பு சட்டம்
குரும்பலூரில் கிணற்றில் இறந்து கிடந்த ஐஸ்வர்யாவும், அவரது காதலன் பார்த்திபனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதலன் பார்த்திபன் மற்றும் அவரது நண்பர் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் ஆகிய இருவரும், ஐஸ்வர்யாவின் சாவிற்கு காரணமாக இருந்துள்ளனர் என்றும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த வழக்கில் நேரடியாக இதுவரை எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இவ்வழக்கில் தங்களிடம் போலீசார் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்த வில்லை என்று ஐஸ்வர்யாவின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர். ஐஸ்வர்யா மரணத்தில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிந்து காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story