தஞ்சை தாசில்தார் அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகை
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தஞ்சை தாசில்தார் அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அனைத்திந்திய மாதர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் மாவட்ட தலைவி கலைச்செல்வி, நகர செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாசில்தார் குருமூர்த்தி அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 2 மணி நேரத்திற்கு பின்னர் கலைந்து சென்றனர். காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் போராட்டம்
பின்னர் அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறுகையில், “தஞ்சை மாநகரில் ஏழை, எளிய மக்கள் 1080 பேர் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி போராட்டமும் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.
இதனால் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். தாசில்தார் இது தொடர்பாக இந்த மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்டோம். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இனி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.”என்றார்.

Next Story