திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலையில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து மாலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(செவ்வாய்க் கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாஸ்கரன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல்ராஜ் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story