ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் சமையல் செய்து சாப்பிட்டனர்
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நடைபெற்றது.
இதனையொட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வசந்தன், மாவட்ட பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
சமையல் செய்தனர்
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story