தலைமை ஆசிரியரின் தாயார் அடித்துக்கொலை; நகை- பணம் கொள்ளை
தஞ்சையில் தலைமை ஆசிரியரின் தாயார் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்துக்கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மனைவி சிவகாமி (வயது 80). இவருடைய மகன் தியாகராஜன், தஞ்சை அருகே வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காசிநாதன் இறந்துவிட்டார் வீட்டில் சிவகாமியும் அவருடைய மகன் தியாகராஜனும் தனியாக வசித்துவந்துள்ளனர். நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற தியாகராஜன் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தனது தாய் சிவகாமி முகம் முழுவதும் மிளகாய் பொடி தூவிய நிலையில், முகம் சிதைந்து பிணமாக கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நகை-பணம் கொள்ளை
மேலும், அவருடைய கழுத்தில் கிடந்த சங்கிலி, காதில் கிடந்த 2 தோடுகள், 2 வளையல்கள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் சிவகாமி தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் யாரோ அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். பின்னர் அவரை அடித்துக்கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தியாகராஜன் தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவேல், சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதேபோல, கை விரல் ரேகை நிபுணர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைகண்ணகி சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தார். மேலும், மோப்பநாய் ராஜராஜன் கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து வெளியே சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மர்மம்
வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கும், வெளியே கட்டிட வேலை பார்த்து வந்த கூலியாட்களுக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியாமல் போனது மர்மமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
தஞ்சையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story