ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்


ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 3:45 AM IST (Updated: 21 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

வில்லுக்குறியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி,

வில்லுக்குறி, மாடத்தட்டுவிளையில் ரூ.16 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, இதை திறந்து செயல்பட வலியுறுத்தி குருந்தன்கோடு ஒன்றிய உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகம் சார்பில் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜெய்மோகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story