ஆபாசமாக சித்தரித்து இளம்பெண்ணின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கொலை மிரட்டல்
இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில் அதிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்தாமரைகுளம்,
சாமிதோப்பு பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண், தன்னுடைய தாய், சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் வசித்தனர்.
அப்போது சகோதரிகள் 2 பேரும், நெல்லை ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த தொழில் அதிபர் அகஸ்டின் (56) என்பவருடைய கம்பெனியில் வேலை பார்த்தனர். அகஸ்டினுக்கு, 24 வயது மதிக்கத்தக்க பெண் மீது காதல் ஏற்பட்டது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். தன்னுடைய தந்தை வயதுடைய தொழில் அதிபர், தன்னை திருமணம் செய்யும் நோக்கத்தில் இருப்பதை அந்த பெண், தாய், சகோதரியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்
இந்தநிலையில் பெண்ணின் சகோதரிக்கு குமரி மாவட்டத்தில் நர்சு வேலை கிடைத்தது. இதனால் அவர்கள் அனைவரும் குமரி மாவட்டத்தில் வந்து தங்கினர். இருப்பினும் அகஸ்டின், அந்த குடும்பத்திற்கு பல வகையில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும், படத்திற்கு கீழே ஆபாச வார்த்தைகளை எழுதியும் அகஸ்டின் இணையதளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே சாமிதோப்பு பகுதியில் நடந்து சென்ற பாதிக்கப்பட்ட பெண், தாயாருக்கு அகஸ்டின் உறவினரான கரிசல்பட்டியை சேர்ந்த சார்வின் (28) மற்றும் ஒருவர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அகஸ்டின், சார்வின் உள்பட 3 பேர் மீது சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் செய்ய மறுத்ததால், இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story