உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நெல்லை மாவட்டம் சார்பில், நெல்லை
நெல்லை,
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
காத்திருப்பு போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நெல்லை மாவட்டம் சார்பில், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
உள்ளாட்சி தேர்தல்உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பணி புரிந்த ஆண்டை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது.
பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த ராஜாராம், பார்த்தசாரதி, ஆறுமுகம், குருசந்திரன், சுப்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த போராட்டத்தில் திரளான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.