கோவில்பட்டியில் அங்கன்வாடி– பகுதிநேர ரே‌ஷன் கடை திறப்பு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


கோவில்பட்டியில் அங்கன்வாடி– பகுதிநேர ரே‌ஷன் கடை திறப்பு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 March 2017 3:18 AM IST (Updated: 21 March 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் குடிநீர் வளர்ச்சி திட்டத்தில் ரூ.5 லட்சத்து 98 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

கோவில்பட்டி,

இதன் திறப்பு விழா நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட பகுதிநேர ரே‌ஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

விழாவில் யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியன், என்ஜினீயர்கள் செந்தில், சித்ரா, வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் செண்பகமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் வேலுமணி, முத்து, மரியசெல்வம், நடராஜன், பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story