வனப்பகுதியில் இருந்து மண்ணுளி பாம்பை பிடித்து வந்து வெளிநாடுகளில் விற்க முயற்சி


வனப்பகுதியில் இருந்து மண்ணுளி பாம்பை பிடித்து வந்து வெளிநாடுகளில் விற்க முயற்சி
x
தினத்தந்தி 21 March 2017 3:29 AM IST (Updated: 21 March 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து மண்ணுளி பாம்பை பிடித்து வந்து வெளிநாடுகளில் விற்பனை செய்ய முயன்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

சிக்கமகளூரு,

வனப்பகுதியில் இருந்து மண்ணுளி பாம்பை பிடித்து வந்து வெளிநாடுகளில் விற்பனை செய்ய முயன்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ரோந்து பணி

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா அஞ்சேபொம்மனஹள்ளி கிராமத்தை ஓட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறை அதிகாரி சீனிவாஸ் தலைமையிலான வனஊழியர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்து 2 பேர் வந்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் 2 பேரும் வனஊழியர்களை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட வனஊழியர்கள் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கையில் ஒரு பை இருந்தது. அந்த பையை வனஊழியர்கள் சோதனை செய்தனர். அந்த பைக்குள் மண்ணுளி பாம்பு இருந்தது. இதனையடுத்து பிடிபட்ட 2 பேரிடமும் வனஊழியர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

வெளிநாடுகளில் விற்பனை செய்ய முயற்சி

விசாரணையில் அவர்கள் அஞ்சேபொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த நவீன், பிரதீப் ஆகியோர் என்பதும், அவர்கள் சிவமொக்கா மாவட்டம் பைதாலு கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு, மல்லேஷ் ஆகியோருடன் சேர்ந்து வனப்பகுதியில் இருந்து மண்ணுளி பாம்பை பிடித்து வந்து, அதை வெளிநாடுகளில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரின் மஞ்சு, மல்லேசையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள், ஒரு மண்ணுளி பாம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கடூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story