கேபிள் டி.வி. இணைப்பு கட்டணத்தை முறைப்படுத்த விரைவில் சட்டம்
கேபிள். டி.வி. இணைப்பு கட்டணத்தை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மேல்–சபையில் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கேபிள். டி.வி. இணைப்பு கட்டணத்தை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மேல்–சபையில் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
கட்டணத்தை முறைப்படுத்த சட்டம்கர்நாடக மேல்–சபையில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் புட்டண்ணா விதி எண் 72–ன் கீழ் கேபிள் டி.வி. இணைப்பு கட்டணம் குறித்து பிரச்சினை கிளப்பினார். இதற்கு அவை முன்னவரும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் பதில் அளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் கேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த விரைவில் ஒரு சட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களிடம் கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள்1994 மற்றும் 1995–ம் ஆண்டு இயற்றப்பட்ட கேபிள் டெலிவிஷன் சட்டங்களின்படி கேபிள் டி.வி. இணைப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இந்த சட்டங்களின் படி ஒரு கேபிள் இணைப்புக்கு ரூ.130 கட்டணம் வசூலிக்க வேண்டும். கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவதில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடக்கின்றன.
இதில் மாநில அரசுக்கு ஒரு பைசா கூட வருவாய் கிடைப்பது இல்லை. எனவே, இந்த கேள்பி டி.வி. இணைப்பு நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம். இதை நாங்கள் செய்வோம். மாநில மற்றும் மாவட்ட அளவில் மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட குழுக்களுக்கு கலெக்டர்களும், மாநில குழுவுக்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலாளரும் தலைவராக இருக்கிறார்கள். குறைகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் இந்த குழுக்களிடம் புகார் செய்யலாம்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.