கடமையை உணர்ந்து பணியாற்றுங்கள் பயிற்சி முடித்த காவலர்களுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை


கடமையை உணர்ந்து பணியாற்றுங்கள் பயிற்சி முடித்த காவலர்களுக்கு கவர்னர் கிரண்பெடி அறிவுரை
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

கடமையை உணர்ந்து பணியாற்றி மாநிலத்துக்கு பெருமை சேருங்கள் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 98 பெண் காவலர்கள், 32 ஆண் காவலர்கள், மற்றும் ஆவடியில் பயிற்சி பெற்ற 173 ஐ.ஆர்.பி.என். காவலர்கள் சமீபத்தில் பயிற்சியை முடித்தனர். இதையொட்டி காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர்களுடன் நேற்று கவர்னர் கிரண்பெடி கலந்துரையாடினார்.

இந்தநிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின்போது பயிற்சி காவலர்களால் தயாரிக்கப்பட்ட பயிற்சி நிறைவு விழாமலரை வெளியிட்டார்.

பெருமை சேர்க்கவேண்டும்

காவலர்களுடன் கலந்துரையாடியபோது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–

புதுவை காவல்துறையில் மகளிர் காவலர்கள் இந்த முறை அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சி நிறைவு விழாவில் அணிவகுப்பு ஒத்திகையை திறம்பட நடத்தினீர்கள். இதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல் பணிக்காலத்திலும் ஒவ்வொருவரும் தங்களது கடமையை உணர்ந்து பணியாற்றி மாநிலத்துக்கு பெருமை சேர்க்கவேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் முழுத்திறமையையும் பயன்படுத்தி பணியாற்றுங்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

விழாவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல் கவாஸ், ராஜீவ் ரஞ்சன் உள்பட போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வர ராவ் நன்றி கூறினார்.


Next Story