உத்தரபிரதேசத்தில் துணை முதல்–மந்திரி பதவி உருவாக்கியது ஏன்?
சிவசேனா நிர்வாகி சஞ்சய் ராவுத் எம்.பி., மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
மும்பை,
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 துணை முதல்–மந்திரி பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மராட்டியத்தில் துணை முதல்–மந்திரி பதவி உருவாக்குவதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதுபற்றி சிவசேனா நிர்வாகி சஞ்சய் ராவுத் எம்.பி., மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
சிவசேனா– பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, துணை முதல்–மந்திரி பதவி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, துணை முதல்–மந்திரி பதவிக்கு பா.ஜனதா எதிரானது என்றும், கட்சியின் கொள்கைப்படி, அதுபோன்ற பதவிகள் உருவாக்கப்பட மாட்டாது என்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். ஆனால், உத்தரபிரதேசத்தில் துணை முதல்–மந்திரி பதவி உருவாக்கியது ஏன்?
இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.
Next Story