ஜெனீவாவில் நடைபெறும் போர்க்குற்றத்திற்கு எதிரான ஓட்டுப்பதிவில் இலங்கைக்கு எதிராக பா.ஜ.க. அரசு வாக்களிக்க வேண்டும் கலிங்கப்பட்டியில், வைகோ பேச்சு
ஜெனீவாவில் நாளை(இன்று) நடைபெற உள்ள போர்க்குற்றத்திற்கு எதிரான ஓட்டுப்பதிவில் இலங்கைக்கு எதிராக பா.ஜ.க. அரசு வாக்களிக்க வேண்டும் என்று கலிங்கப்பட்டியில் வைகோ கூறினார்.
திருவேங்கடம்,
ஜெனீவாவில் நாளை(இன்று) நடைபெற உள்ள போர்க்குற்றத்திற்கு எதிரான ஓட்டுப்பதிவில் இலங்கைக்கு எதிராக பா.ஜ.க. அரசு வாக்களிக்க வேண்டும் என்று கலிங்கப்பட்டியில் வைகோ கூறினார்.
மதுக்கடையை மூட உத்தரவும.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வைகோவின் தயா£ர் மாரியம்மாள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் அந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடுவதற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது.
மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் கலிங்கப்பட்டியில் நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வைகோ தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் முடிவில் அண்ணா திடல் மந்தையை அடைந்தது.
முன்னதாக ஊர்வலத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது:–
கோர்ட்டு தள்ளுபடிகலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த 2002–ம் ஆண்டு பஞ்சாயத்தில் தீர்மானம் போடப்பட்டது. 2015–ல் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் நீதிபதி அந்த மதுக்கடையை திறக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.
பின்னர் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்து விட்டது. இந்த உத்தரவின் மூலம் கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் போட்ட தீர்மானம் போல், இந்தியாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டி விட்டோம்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நாளை(இன்று) ஜெனீவாவில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிட்டனும் தீர்மானம் கொண்டு வர உள்ளனர். இதற்கு முன்பு நடந்த ஓட்டெடுப்பின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஆதரவு அளித்தது.
தற்போதைய பா.ஜ.க. அரசு நாளை(இன்று) நடைபெறும் ஓட்டெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்திய இனப்படுகொலையை மூடி மறைக்கிற குற்றவாளி என்று மத்திய அரசை எதிர்த்து நான் தெருத்தெருவாக பிரசாரம் செய்வேன்.
தொடர்ந்து போராடுவேன்தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர நான் தொடர்ந்து போராடுவேன். மாணவர்களை திரட்டி மாரத்தான் போட்டி நடத்துவேன். தமிழகத்தில் ஊர், ஊராக சென்று வேன் பிரசாரம் மேற்கொள்வேன்.
பீகாரில் மதுக்கடை இல்லை. பஞ்சாபில், மதுக்கடையை அகற்றுவதாக முதல்–அமைச்சர் அறிவித்து விட்டார். தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காக தொடர்ந்து போராட எனது தாயார் போராடிய இடத்தில் இருந்து நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.