நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 March 2017 2:00 AM IST (Updated: 21 March 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

முன்னதாக அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட இணை செயலாளர் துரை டேனியல், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட தலைவர் பால்துரை, வணிகவரித்துறை அலுவலர் சங்க நெல்லை மாவட்ட துணை தலைவர் கற்பகம், நில அளவை அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் ஸ்டான்லி, வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் குருச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.

போராட்டத்தில் திரளான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story