வள்ளியூர் அருகே பள்ளிக்கூட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது சிறையில் அடைக்கப்பட்டார்


வள்ளியூர் அருகே பள்ளிக்கூட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது சிறையில் அடைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 22 March 2017 1:00 AM IST (Updated: 21 March 2017 8:45 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே பள்ளிக்கூட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே பள்ளிக்கூட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைமை ஆசிரியர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மகிழடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் நம்பிராஜன் (வயது 49). இவர், ராதாபுரம் தாலுகா சிங்காரதோப்பு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் நம்பிராஜன் அடிக்கடி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளார்.

வேறு பள்ளிக்கு இடமாற்றம்

இதனை அந்த குழந்தைகள், தங்களது பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதனர். இதையடுத்து சிங்காரதோப்பு கிராம மக்கள், நம்பிராஜன் மீது கல்வித்துறை அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நல அமைப்பினருக்கும் புகார் மனு அனுப்பினர்.

இதை தொடர்ந்து நம்பிராஜனை, திசையன்விளை அருகே உள்ள காரம்பாடி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நம்பிராஜன் காரம்பாடு பள்ளிக்கூடத்தில் பணியில் சேர்ந்தார்.

கைது

இந்த நிலையில் நம்பிராஜன் மீது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். மனு மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் நம்பிராஜனை போலீசார் கைது செய்து வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நம்பிராஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story