தா.பழூர் விசுவநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி தா.பழூர் விசுவநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் காலபைரவரை தரிசித்தால் தீராத கடன் தீரும், திருமண தடை நீங்கும், எதிரிகளின் தொல்லை குறைந்து சங்கடங்கள் மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமி என்பதால் விசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை கோவில் சிவாச்சாரியார் ராமநாத குருக்கள் செய்து வைத்தார். பின்னர் காலபைரவருக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள்
இதில் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் தங்களது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சிறப்பு அபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை தா.பழூர் காலபைரவர் வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் மாலா தலைமையில் பெண்கள் செய்திருந்தனர்.

Next Story