குண்டும்-குழியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குண்டும்-குழியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
ஆர்.எஸ்.மாத்தூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து பெண்ணாடம் செல்லும் சாலையில் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே இருங்களாக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூர சாலை குண்டும்-குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். குறிப்பாக, தொழில் விஷயமாக பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், சாலையை சீரமைக்க கோரியும் பொதுமக்கள் நேற்று அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story