சத்துணவு ஊழியர்கள் 3 -வது நாளாக மறியல் போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் 3 -வது நாளாக மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2017 4:15 AM IST (Updated: 24 March 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் 3- வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் 333 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், சமையலர்,உதவியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 21-ந்தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தினமும் மறியல் போராட்டமும் நடத்தினர்.

333 பேர் கைது

நேற்று 3-வது நாளாக இவர்களது போராட்டம் நடந்தது. இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகில் கூடி நின்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமையில் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சிராஜுதீன் போராட்டம் நடத்தியவர்களை வாழ்த்தி பேசினார். நேற்றைய மறியல் போராட்டத்தின் போது 333 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story