ஆசை வார்த்தைக்கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த என்ஜினீயர் கைது


ஆசை வார்த்தைக்கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 25 March 2017 3:45 AM IST (Updated: 25 March 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த என்ஜினீயரை பவானி போலீசார் கைது செய்தனர்.

பவானி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த 22 வயது கொண்ட பி.எஸ்.சி. பட்டதாரி பெண் வங்கி தேர்வு எழுதுவதற்காக தூத்துக்குடியில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சேர்ந்து படித்து வந்தார். இந்த பயிற்சி மையத்தில் திருச்சி மாவட்டம் கீழ் கல்கண்டார்கோட்டை தனலட்சுமி நகரை சேர்ந்த என்ஜினீயரான கவுதம் (24) என்பவரின் உறவு பெண்ணும் படித்து வந்தார்.

இந்த பெண்ணை பார்ப்பதற்காக கவுதம் தூத்துக்குடிக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அந்த பெண்ணின் அறையில் அந்தியூர் பெண்ணும் தங்கி இருந்தார். இதன்காரணமாக அந்தியூர் பெண்ணிடம், கவுதம் நெருங்கி பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அந்தியூர் பெண்ணிடம் கவுதம் உல்லாசம் அனுபவித்தார்.

கைது

இந்த நிலையில் அந்தியூர் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவுதமிடம் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி உல்லாசம் அனுபவித்து தன்னை கவுதம் ஏமாற்றி விட்டார் என பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்தியூர் பெண் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி என்ஜினீயர் கவுதமை கைது செய்தார்.


Next Story