திருட்டு கும்பலிடம் இருந்து ரூ.3 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு


திருட்டு கும்பலிடம் இருந்து ரூ.3 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 26 March 2017 3:05 AM IST (Updated: 26 March 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு கும்பலிடம் இருந்து ரூ.3 கோடி நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது. அவற்றின் உரிமையாளர்களிடம், மந்திரி பரமேஸ்வர் வழங்கினார்.

பெங்களூரு,

பெங்களூரு மகாதேவபுரா, ஒயிட்பீல்டு, பரப்பனஅக்ரஹாரா, பீனியா, ராமமூர்த்திநகர், உளிமாவு, கொடிகேஹள்ளி, சிக்கஜாலா ஆகிய போலீஸ் நிலைய போலீசார் நகரில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்திருந்தார்கள். அந்த கும்பலிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், 62 வாகனங்களை போலீசார் மீட்டு இருந்தார்கள். இதன் மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடந்திருந்த 16 கொள்ளை வழக்குகள், 83 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

திருட்டு, கொள்ளை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டார். பின்னர் அவர், மீட்கப்பட்ட தங்க நகைகள், வாகனங்களை பார்வையிட்டார். அதன்பிறகு, அந்த பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story